ஒரு வயது மகனை புலியுடன் சண்டையிட்டு காப்பாற்றிய தாய்!

0
74

போபால், மத்திய பிரதேசத்திலுள்ள பந்தாவ்கர் புலிகள் சரணாலயத்தில் இருந்து புலி ஒன்று அங்கிருந்து வெளியேறி, அருகில் உள்ள ரோஹானியா கிராமத்துக்குள் புகுந்து கொண்டது. இதனையறியாமல் பெண் ஒருவர், தனது ஒரு வயது மகனை விவசாய நிலத்துக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த புலியானது, இருவர் மீதும் திடீரென பாய்ந்து தாக்கியுள்ளது. இதில், பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

தனது மகனை கவ்வி செல்ல முயன்ற அந்த புலியுடன் போராடி, தன்னுடைய மகனை அந்த பெண் காப்பாற்றி உள்ளார். அப்போது, புலி அதன் நகங்களால் பலமுறை அந்த பெண்ணை தாக்கியுள்ளது.

அதன் பிறகுதான், கிராம மக்களுக்கு அந்த பெண்ணினுடைய அலறல் சத்தம் கேட்டு அவர்கள் அனைவரும் ஓடிவந்து, புலியை விரட்டி அடித்து, இருவரையும் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here