வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சின்ன மீட் அப்! ரோஜாவை சந்தித்து கட்டியணைத்த ரம்யா கிருஷ்ணன்! வைரலாகும் போட்டோ…!

Today Cinema News in Tamill

தென்னிந்திய திரையுலகிலே 90sகளின் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். தற்போது நடிகை ரோஜா ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பதவியில் உள்ளார். ரம்யா கிருஷ்ணன் சினிமாவிலே குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களும் கூட ஆவார்கள்.

Today Cinema News in Tamill

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ரோஜாவை அவரது வீட்டிற்கு சென்று ரம்யா கிருஷ்ணன் சந்தித்து பேசியுள்ளார். இருவரும் அவர்களது பழைய நினைவுகள் குறித்து பேசினார்கள். மேலும், ரம்யா கிருஷ்ணன் தன்னை நேரில் வந்து சந்தித்த புகைப்படங்களை ரோஜா தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், “எப்போதுமே ரம்யாகிருஷ்ணனை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாகவே இருக்கும். அதோடு, அந்த காலத்தில் எங்களுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் இருந்தது என்று சந்தோசமான நினைவுகளை குறித்து பேசி மகிழ்ந்தோம்” என்று ரோஜா பதிவிட்டுள்ளார்.


LATEST POSTS IN VALAIYITHAL.COM