என்னது ஒரு லிட்டர் பால் ரூ.8000… இந்த பாலுக்கு இவ்வளவு மவுசா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!!

நாடு முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பசு மாட்டின் பாலை உட்கொண்டு வருகின்றனர். ஒரு சிலர் எருமை மாட்டு பால் மற்றும் ஆட்டு பாலையும் உட்கொண்டு வருகின்றனர். ஆனால், இதில் இருக்கும் சத்துக்களை விட கழுதை பாலில் இருக்கும் சத்துக்கள் தான் அதிகம் என்றும் பலரும் கூறி வருகின்றனர். கழுதை பால் அந்த அளவிற்கு கிடைக்காததால் அந்த பாலின் விலை உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில், கழுதை பாலில் உடல் பருமன், புற்றுநோய் மற்றும் ஒவ்வாமை தொடர்பான பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய நன்மைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால் இந்த பாலுக்கு வந்த மவுசு மேலும் கூடியுள்ளது. இதனால் ஒரு லிட்டர் கழுதை பாலின் விலை ரூ.8000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கழுதை பால் விற்பனை அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கழுதை பால் வியாபாரிகள் கூறுகையில், ஒரு கப் கழுதை பால் அதாவது 25 மிலி ரூ. 200 வரை விற்பனை செய்து வருவதாகவும் இந்த பாலின் மதிப்பு தற்பொழுது தான் உலகம் அறிந்து வருதாகவும் தெரிவித்தார். மேலும், கழுதை ஒன்று ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பாலை மட்டுமே கரக்கும் என்பதால் இந்த பாலின் விலை அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

A liter of my milk is Rs.8000So much mousa for this milk Public in shock watch now

LATEST POSTS IN VALAIYITHAL.COM