ஒரு நகைச்சுவை கடைசியாய் அழவைத்துவிட்டது – டிவிட்டர் பக்கத்தில் மனோபாலா குறித்து வைரமுத்து உருக்கமான பதிவு

0
16
Cinema News

நகைச்சுவை நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல்வேறு தனித்திறமை உடையவர் நடிகர் மனோபாலா. இவர் பெரும்பாலும் மக்களை தன் நகைச்சுவையில் அதிகம் ஈர்த்திருக்கிறார். இவர் தமிழில் கிட்டத்தட்ட 700 படங்களில் நடித்திருக்கிறார். அதோடு இவர் ஒரு பிரபல யூடியூப்பரும் ஆவார்.

மனோபாலா அவர்கள் தமிழில் மொத்தம் 40 திரைப்படங்களை இயக்கியுள்ளார். 16 தொலைக்காட்சித் தொடர்களையும் 3 தொலைக்காட்சித் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்களை மகிழ்வித்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்ப்பட்டதால் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உடல்நலம் தேறி வீடு திரும்பினார். ஆனால் நேற்றைய தினத்தில் அவர் திடீரென இறந்துவிட்டார். அவரது இறப்புக்கு திரையுலகத்தில் பலரும் இரங்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரு நகைச்சுவை
கடைசியாய்
அழவைத்துவிட்டது

மரணத்தின் இறுதிவரை
இயங்கிக்கொண்டிருந்த
மனோபாலா இன்று இல்லை

திரையின் எல்லாத்
துறைகளிலும் இயங்கியவன்;
எல்லாரோடும் பழகியவன்
இனி இல்லை

ஒல்லியாய் இருப்பவர்கள்
நீண்டநாள் வாழ்வார்கள்
என்ற மனிதக் கணக்கை
மரணம் உடைத்துவிட்டது

என் ஆழ்ந்த இரங்கல்

மனோபாலாவின் இறப்பை தாங்க முடியவில்லை என கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டார்.

pic.twitter.com/8rDHnL5qUh


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here