பொதுமக்களுக்கு ஒரு குட் நியூஸ்…! கேஸ் சிலிண்டர் விலை குறைய போகுது -அரசின் சிறப்பு திட்டம்

0
53

தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டரின் விலை விண்ணை தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டரின் விலை ஏற்றத்தால் பாமர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு ஒரு சில சிறப்பு திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்நிலையில், இந்த கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்க மத்திய அரசு பழைய எண்ணை வயல்களில் இருந்து வெளிவரும் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயிக்க அதனை மறு ஆய்வு செய்வதற்கு ஒரு குழுவை அமைத்து இது குறித்து திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்த்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி இரண்டின் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு பற்றி ஏஎனை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள கருத்தில், மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் இறுதி வடிவத்தினை திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரிட் எஸ். பரேக் தலைமையிலான குழு இதனை பின்பற்றி வருவதாகவும் இந்த குழு விரைவில் தனது அறிக்கையை அரசிடம் சமர்பிக்கும் என்று எதிர்ப்பார்க்ப்படுகிறது.

மேலும், இந்த குழு நிர்ணயிக்கும் விலையில் 2 வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கும் என்றும் அவற்றில், ஓஎன்ஜிசி மற்றும் ஆயில் இந்தியா லிமிடெட் ஆகியவற்றின் பழைய எண்ணெய் வயல்களில் இருந்து வெளிவரும் எரிவாயு விலைக்கான விலை வரம்புக்கும், பிற எண்ணெய் வயல்களில் இருந்து வரும் எரிவாயுகளுக்கான விலை நிர்ணயிப்பது மாறுபடலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here