77 ஆண்டு காலமாக இரும்பு நுரையீரலுடன் வாழும் அதிசய மனிதர்! யாருக்கும் வராத சோதனையிலும் சாதனை…!

World News Today 2023

மனிதனாக பிறந்து ஒரே இடத்தில் அதுவும் ஒரு இரும்பு குடுவைக்குள் வாழும் மனிதர் தான் பால் அலெக்சாண்டர். அந்த சுவாசம் இல்லை என்றல் தன்னை விட்டு உயிர் பிரிந்துவிடும் என்ற பயத்தில் சுமார் 70 ஆண்டு காலமாக இந்த பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இவர் இரும்பு நுரையீரல் நாயகன் என்று அழைக்கப்படுகிறார். தன் சிறு வயதிலே துரு துருவென ஓடிக்கொண்டிருக்கும் பால் அலெக்சாண்டர்க்கு தெரியாது, நாம் வாழ்நாள் முழுவதும் ஓடி விளையாட முடியாது என்று, 6 வயதிலே மூச்சு திணறல் மற்றும் போலியோ வந்தது போல அவர் கீழே விழ, அவரை அவருடைய பெற்றோர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே அவரை காப்பாற்ற முடியாது எனவும், 75% நுரையீரல் செயலிழந்து விட்டது எனவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

இந்த நிலையில் அங்கிருந்த ஒரு மருத்துவர் அவருக்கு ‘Tracheostomy’ என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். இந்த சிகிச்சையில் ஒரு நபரின் மூச்சுக்குழாய்க்குள் ஒரு குழாயை வைத்து உடலை மூடியவாறு ஒரு இரும்பு நுரையீரல் உருளையை வைத்து ஆக்சிஜன் நிரப்பி உயிரை தக்க வைக்கும் முயற்சி. அது வெற்றியை தந்தது. ஆனால் மிகவும் கொடுமையானது என்னவென்றால் அவர் அந்த குடுவையை விட்டு வெளியே வர முடியாது. கழுத்து மட்டுமே இரும்பு உருளையின் வெளிப்புறத்தில் இருக்கும். மேலும் அவர் செய்யக்கூடிய பல் துலக்குதல், குளிப்பது, மலம் கழித்தல் போற்றவற்றை சுத்தம் செய்ய மற்றவரின் உதவி தேவைப்பட்டது.

இப்படியாக அவர் வாழ்ந்துகொண்டிருக்கும் போது, இளமை பருவத்திலே இருக்கும் போது தன்னை வெளியே அழைத்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளும் போது ஒன்றிரண்டு நாட்களில் மட்டும் அவரது பெற்றோர், மிகுத்த சிரமத்துடன் திரைப்படம், கேளிக்கைகள் போன்றவற்றை காண அழைத்து சென்றனர். மேலும், தலையை தவிர எந்த உறுப்புகளுமே செயல்படாத நிலையில் சாதிக்க முடியும் என நிரூபித்து விட்டார். ஆம், அவர் கடினப்பட்டு படித்து, எழுதவும், தனது வாயால் ஓவியம் வரையவும் கணினி இயக்கவும் செய்வார். தனது விடாமுயற்சியால் பல நிபந்தனைகளின் அடிப்படையில் ஒரு கல்லூரில் சேர்ந்து வழக்கறிஞராக பட்டம் பெற்றார். சில வரலாற்று புத்தகங்களை அவர் எழுதியிருக்கிறார். மேலும், உங்களுடைய இயலாமையை நினைத்து யாரும் வருத்தப்படாதீங்க. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக நான் இருக்கிறேன் என்று வேதனையுடன் பால் அலெக்சாண்டர் கூறினார். இன்றும் பால் அலெக்சாண்டர் 77 ஆண்டுகளாக இந்த இரும்பு நுரையீரலுடனேயே தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


LATEST POSTS IN VALAIYITHAL.COM