சிறுதானியங்கள் தான் முன்னோர்களால் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. உணவே மருந்து என்பதற்கு உதாரணமாக திகழ்வது சிறுதானிய உணவுகள் தான்.
சிறு தானியத்தில் பல நன்மைகள் இருக்கிறது. அதாவது இந்த சிறு தானியத்தில் புரத சத்து, நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் சத்து, போன்றவை அதிகமாக நிறைந்துள்ளது. நம்முடைய தாத்தா, பாட்டி போல் ஆரோக்கியமாக வாழ நினைத்தால் தினமும் ஒரு வகை தானியத்தையாவது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7 Types of Small Grains and Uses
வரகு
உடல் பருமன் குறைய பெரிதும் உதவுகிறது வரகு. மலசிக்கல், மாதவிடாய் பிரச்சனை, சர்க்கரை அளவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியற்றின் பிரச்சனைகளையும் நீக்குகிறது.
திணை
நார்ச்சத்து, புரத சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, பாஸ்பரஸ், மாவுசத்து போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது திணை. கண்கள் சிறப்பாக தெரியவும், இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் வழி வகுக்கிறது இந்த திணை.
சாமை
சர்க்கரை நோய் உள்ள அனைவரும் சாமை சாப்பிடுவது நல்லது. இரத்த சோகை மற்றும் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
கம்பு
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் வெப்பத்தை குறைக்கிறது. வயிற்று புண் வராமல் தடுக்கும் அருமருந்து.
குதிரைவாலி
புற்று நோய்கள், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் வராமல் தடுக்கும். இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.
சோளம்
சர்க்கரை நோய், செரிமான கோளாறு, இரத்த சோகை பிரச்னைக்கு சிறந்த மருந்து. நம் உடலில் உள்ள உப்பின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
கேழ்வரகு
எலும்பு தேய்மானம், ரத்த சோகை, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாக இருக்கும். இரும்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் பி அதிகம் உள்ளது.