இது ஆண்களுக்கான பதிவு தான்!… பெரும்பாலும், நீங்கள் காதலிக்கும் பெண் தினமும் சந்திக்கும் அல்லது பார்க்கும் ஒரு நபராக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆகையால், அவர்களிடம் முதலில் உங்களின் காதல் வெளிப்படுமாறு நடந்து கொள்ளுங்கள். அவர்கள் உங்களை கவனிக்கும் படி நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் அவர்களும் உங்களை நினைவில் கொள்ளுவார்கள். வாழ்வில் மிகப்பெரிய கனவுகளையும் இலட்சியங்களையும் கொண்டு அதற்காக உழைக்கும் ஆண்களை தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள். இதுவே உங்களின் மேல் ஈர்ப்பும், காதலும் வர ஒரு வாய்ப்பாக அமையும்.
உங்களின் மீது காதலை வரவழைக்க 7 சிறந்த வழிமுறைகள்
1. சிறந்த நண்பனாக இருங்கள்:

நீங்கள் விரும்பும் பெண்ணிற்கு, எப்போதும் நல்ல தோழனாக இருக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் காதலை ஏற்றுக் கொண்டாலும் அல்லது மறுப்பு தெரிவித்தாலும், நீங்கள் உங்களின் நிலையில் சரியாக இருக்க வேண்டும். ஒரு போதும் தவறான வழியில் செல்ல கூடாது என்பதை, எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் விரும்பும் பெண்ணிற்கு, நீங்கள் அவர்களை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை உணர்த்த முயற்சி செய்யுங்கள்.
அது அவர்களுக்கு உங்களின் மேல் நல்ல எண்ணங்கள் தோன்றுவதற்கு ஒரு வழியாக இருக்கும். உங்களின் எண்ணங்களை தூய்மையாகவும் உண்மையாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் மனதிற்கு பிடித்த பெண் உட்பட, எல்லோரிடத்திலும் அன்பாக இருங்கள். முடிந்தவரை நல்ல நண்பனாகவும், ஒரு சிறந்த மனிதனாகவும் இருங்கள். இது அந்த பெண்ணிற்கு உங்களின் மேல் உண்மையானதொரு அன்பை வர வழைக்கும்.
2. பேசுவதை பொறுமையாக கேளுங்கள்:

நீங்கள் காதலிக்கும் பெண்ணிடம் பேசும் பொழுது, சற்று நிதானமாகவும்; பொறுமையாகவும்; அன்பாகவும் பேச வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று. முதலில் உங்களின் மேல் நம்பிக்கை வரும்படி, நடந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு தானாகவே உங்கள் மீது மரியாதை என்பது வந்து விடும். அவர்களிடம் பேச தொடங்கியதும், முதலில் நீங்கள் பேசாமல் அவருக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
அப்படி செய்யாமல், நீங்களே பேசிக் கொண்டு இருக்க கூடாது. பொதுவாகவே, பெண்களுக்கு அவர்கள் பேசும் போது பொறுமையாக கேட்கும் ஆண்களை மிகவும் பிடிக்கும். “ஒரு ஆண் என்னை சமமாக மதிக்கிறான்” என்ற எண்ணமே, ஒரு பெண்ணுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அவர்களை வெறும் வார்த்தைகளில் அல்லாமல், மனதளவில் மகிழ்ச்சிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு, உங்களின் காதலை அவர்களுக்கு புரிய வைப்பது எளிதாகிவிடும்.
3. உரையாடலை முடிப்பது அவசியம்:

பெரும்பாலும் பேச தொடங்குவது பெண்ணாகவும், அந்த உரையாடலை முடிப்பது ஆணாகவும் இருக்கும். இதற்க்கு காரணம், ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பேசுவார்கள் என்பது தான். இதில் தவறு எதுவும் இல்லை. ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்க வைக்க இந்த முறையையும் பின்பற்றலாம். அதாவது, அவர்களுடனான உரையாடலை முதலில் முடிப்பது. இதில் தவறு ஒன்றும் இல்லை. நீங்கள் வேண்டுமென்றே உரையாடலை முடிக்கவில்லை என்பதால், அவர்களும் மறுப்பு தெரிவிக்க போவது கிடையாது.
ஆதலால், நீங்கள் உங்களின் வேலையின் மீது கவனத்தை செலுத்தலாம். இதுவும் பொதுவாக பெண்களை கவருவதற்கான ஒரு யுக்தி தான். எந்த ஆண் தன்னுடைய குறிக்கோளை நோக்கி செல்கிறானோ… அவனை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இப்படி செய்வதால், அவர்களே மீண்டும் உங்களிடம் பேச விரும்புவார்கள். இதனால், அந்த பெண்ணின் கவனம் உங்கள் மீது திரும்பும். உங்களின் மீது காதல் ஏற்பட, இதுவும் ஒரு வாய்ப்பாக மாறலாம்.
4. தேவையான நேரத்தில் மட்டும் உதவுங்கள்:

பொதுவாக ஆண்களிடம் ஒரு உதவியை பெண்கள் கேட்டாலே, முதலில் அதை செய்து விடுவார்கள். நீங்கள் உதவி செய்வதில் தவறில்லை. ஆனால், அளவுக்கு மீறிய எந்த செயலும் ஆபத்தில் முடியும் என்பதை மனதில் கொள்ளுங்கள். முடிந்த வரை உதவி கேட்டால், மறுப்பு தெரிவியுங்கள். நீங்கள் காதலிக்கும் பெண்ணிற்கு, உங்களின் உதவி தேவைப்படும் பொழுது மட்டும் செய்யுங்கள். எல்லா நேரங்களிலும் செய்ய வேண்டிய அவசியமோ, தேவையோ கிடையாது.
இதை புரிந்து கொள்வது அவசியம். உங்களின் மதிப்பை எப்போதும் குறைக்கும் படியான செயல்களை செய்யாதீர்கள். உங்களுக்கு பிடித்த பெண் என்பதால், அவர்களுடான சந்திப்பை கவனத்துடன் கையாளுங்கள். இந்த ஒரு சந்திப்பு கூட உங்கள் மனதில் இருப்பதை, அவர்களுக்கு புரிய வைக்கலாம். உங்களின் சந்திப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
5. உங்கள் மதிப்பை உணர வையுங்கள்:

நீங்கள் விரும்பும் பெண்ணுடன் நேரத்தை செலவிடுவதில் கவனம் செலுத்துங்கள்… அப்படியல்லாமல், உங்களின் நேரத்தை அவர்களுடன் செலவிட்டுக் கொண்டே இருந்தால், அவர்களிடம் உங்களின் மதிப்பு குறையவும் வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கு உங்களின் மதிப்பு தெரியாமலேயே போய்விடும். பெரும்பாலும் அவர்களுடன் நேரம் செலவிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
அப்போது தான், உங்களை பற்றிய சிந்தனை அவர்களுக்கு அதிகமாக தோன்ற ஒரு வாய்ப்பாக இருக்கும். அது, உங்கள் மீது ஒரு வித ஈர்பபை ஏற்படுத்தி, உங்களின் மீதான கவனத்தை அதிகரிக்கும்; உங்கள் மீது ஆர்வத்தை தூண்டும். அவர்கள் சிந்தனையில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள். உங்களின் மதிப்பு என்னவென்று, அவர்களை உணர வைத்தாலே போதும்… உங்களை காதலிக்க இதுவும் ஒரு வாய்ப்பாக மாறும்.
6. கவனத்தை குறைத்துக் கொள்ளுங்கள்:

நீங்கள் காதலிக்கும் பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடாது. இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி வரும்! முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால், நான் எப்படி அந்த பெண்ணை என்னை காதலிக்க வைக்க முடியும்? இந்த கேள்விக்கான பதிலில் தான் ஒரு விஷயம் உள்ளது.
“பெரும்பாலும் நமக்கு அருகில் இருக்கும் பொருளை விட, நமக்கு தொலைவிலுள்ள பொருள் தான் நம்மை அதிகம் ஈர்க்கும்”.
இதை வாழ்க்கையுடன் ஒப்பிட்டால், நமக்கு அருகில் இருப்பவர்களுக்கு நமது முக்கியத்துவமும் அவர்கள் மீதுள்ள நமது கவனமும் எப்போதும் குறைவாக தான் இருக்கும். அதுவே நம் மீது கவனம் இல்லாதவர்களை ஈர்க்க பல செயல்களை செய்வோம். அவர்களுக்கான முக்கியத்தை அதிகமாக செலுத்துவோம். இதில் நடப்பது இதுதான்… நமக்கு ஒரு பொருள் எளிதாக கிடைத்துவிட்டால், அதன் மதிப்பு குறைந்துவிடும்!.. அதே பொருள் கிடைக்கும் சாத்தியம் குறைவு என்றால், நமது கவனம் முழுக்க அந்த பொருளின் மீது தான் இருக்கும்.
எப்படியாவது, அதை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கும். இது தான் மனிதனின் உளவியல் உண்மை. இதை நன்கு அறிந்தவர்கள் எப்போதும், அவர்களுக்கு பிடித்தவர்களை ஈர்க்க அவர்களின் மீது கவனம் சற்று குறைவாக இருக்குமாறு காட்டிக் கொள்வார்கள். அவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்வார்கள். இது நீங்கள் ஈர்க்க விரும்பியவரிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். இதை தான் நீங்கள் உங்களின் காதலியிடம் செய்ய வேண்டும். அவர்களின் மீதுள்ள கவனத்தை சற்று குறைத்துக் கொள்ளுங்கள்.
7. உண்மையான உணர்வை வெளிப்படுத்துங்கள் :

நீங்கள் விரும்பும் பெண்ணை பற்றிய உங்களின் பார்வையை, அவர்களிடமே சொல்லி புரிய வையுங்கள். நீங்கள் உண்மையை தான் சொல்கிறீர்கள் என்று அவர்கள் முழுமையாக நம்ப வேண்டும். உங்களின் உண்மையானதொரு உணர்வை வெளிப்படையாக கூறுங்கள். மேலும், நீங்கள் அவர்களை பற்றி மட்டுமே பேச வேண்டும். அவர்களிடம் பிடித்தது என்ன? ஏன் பிடித்தது? முதல் சந்திப்பு எப்போது ஏற்பட்டது? இது போன்ற எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லி விடுங்கள்.
மேலும், உங்களின் குறிக்கோளை பற்றியும் தெளிவாக கூறுங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கே உங்கள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அவர்களே அவர்களை பற்றி உங்களிடம் பேச தொடங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. இதுவும் சில நேரங்களில் வேலை செய்யும். இவையனைத்தும், நாம் கூறும் சூழ்நிலையை பொருத்தும், எதிரில் இருப்பவரின் மனநிலையை பொருத்தும் அமைய கூடியதாகும். எப்படி இருந்தாலும், உங்களின் மனதில் இருப்பதை உண்மையாக சொல்லி விடுங்கள். நடப்பவை எல்லாம் நல்லதாகவே நடக்கும்.