ஸ்ரீ விநாயகர் சதுர்த்தியில் ஸ்பெஷலான 5 வகை கொழுக்கட்டைகள்!

0
126

விநாயகர் சதுர்த்தி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது… வழிபாடும், கொழுக்கட்டையும் தான். விநாயகர் சதுர்த்தியன்று வீட்டை சுத்தம் செய்து, முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடுவர். அவருக்கு பிடித்தமான பலகாரங்களை செய்து வைத்து அவரை வணங்குவர். அதில் கொழுக்கட்டையும் ஒன்று. கொழுக்கட்டை என்பது ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகும். அதில் குறிப்பிட்ட 5 வகையான கொழுக்கட்டைகள் உள்ளன. கொழுக்கட்டை செய்வது எப்படி? தொடர்ந்து படியுங்கள்…

1. வாழை இலை கொழுக்கட்டை

2. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

3. பால் கொழுக்கட்டை

4. தெரளி கொழுக்கட்டை

5. பிடி கொழுக்கட்டை

ஆகிய இந்த 5 கொழுக்கட்டை வகைகளின் செய்முறைகளை காணலாம்.

1. வாழை இலை கொழுக்கட்டை

வாழை இலை கொழுக்கட்டை ரெசிப்பி

வாழை இலை கொழுக்கட்டை செய்வதற்கு எளிமையாகவும், விரும்பி சாப்பிட கூடியதாகவும் இருக்கும். இது பாரம்பரிய கொழுக்கட்டையாகவும் இருக்கிறது. இதனை நெய், அரிசி மாவு, எண்ணெய், உப்பு, ஏலக்காய் பொடி, பாசிப்பருப்பு, நாட்டுச் சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யலாம்.

செய்முறையை அறிந்துகொள்ள > வாழை இலை கொழுக்கட்டை ரெசிப்பி

2. தேங்காய் பூர்ண கொழுக்கட்டை

தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெசிப்பி

தேங்காய் பூர்ண கொழுக்கட்டையும் செய்வதற்கு மிகவும் எளிமையானது. விநாயகருக்கு படைக்க நினைத்தால், இந்த தேங்காய் பூர்ண கொழுக்கட்டையை படைக்கலாம். இது சாதாரண கொழுக்கட்டையாகும். இதை வரலக்ஷ்மி நோன்பிற்க்கும் செய்யலாம். இதனை அரிசி மாவு, ஏலக்காய் பொடி, வெல்லம், தேங்காய்(துருவியது), உப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யலாம்.

செய்முறையை அறிந்துகொள்ள > தேங்காய் பூர்ண கொழுக்கட்டை ரெசிப்பி

3. பால் கொழுக்கட்டை

பால் கொழுக்கட்டை ரெசிப்பி

பால் கொழுக்கட்டை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இதன் சுவை பலரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். இதில் வெல்லத்தை பயன்படுத்துவதால், அதில் உள்ள இரும்புச்சத்து நமக்கு கிடைக்கிறது. மேலும் வெல்லம், “தொண்டை மற்றும் நுரையீரல்” தொடர்பான நோய்களையும் குணப்படுத்தும். இதனை எண்ணெய், சுக்கு பொடி, வெல்லம், காய்ச்சிய பால்,அரிசி மாவு, இட்லி அரிசி, துருவிய தேங்காய், ஏலக்காய் பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யலாம்.

செய்முறையை அறிந்துகொள்ள > பால் கொழுக்கட்டை ரெசிப்பி

4. தெரளி கொழுக்கட்டை

தெரளி கொழுக்கட்டை ரெசிப்பி

விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டைகளுள் தெரளி கொழுக்கட்டையும் ஒன்று. இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்தியன்று, பிள்ளையாருக்கு படைக்கலாம். இதனை சுக்கு பொடி, ஏலக்காய் பொடி, வெல்லம், அரிசி மாவு, தேங்காய் (துருவியது) உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யலாம்.

செய்முறையை அறிந்துகொள்ள > தெரளி கொழுக்கட்டை ரெசிப்பி

5. பிடி கொழுக்கட்டை

பிடி கொழுக்கட்டை ரெசிப்பி

பிள்ளையாருக்கு பிடித்தமான பிடி கொழுக்கட்டையை செய்வதும் எளிது. மேலும் சுவையும் நன்றாக இருக்கும். இதனை துருவிய தேங்காய், தேவைக்கேற்ப எண்ணெய், அரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் பொடி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செய்யலாம்.

செய்முறையை அறிந்துகொள்ள > பிடி கொழுக்கட்டை ரெசிப்பி


ALSO READ

விநாயகரை வழிபடும் முறைகள் என்னனு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here