ஒரே ஆண்டில் 18 படங்கள்! திரைப்பயணத்தில் சாதனை படைத்த நடிகர் விஜயகாந்த்!

Actor Vijayakanth

கேப்டன் என்று சொன்னாலே நமக்கு முதலில் நியாபகம் வருவது கேப்டன் விஜயகாந்த். இவர் 1953 ஆண்டில் பிறந்தார். இவருக்கு வயது 71 ஆகும். தமிழ் சினிமாவிலே ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடித்த நடிகர். அதுமட்டுமில்லை, தே.மு.தி.க கட்சியின் தலைவரும் ஆவார். இந்நிலையில் இன்று 28.12.2023 (வியாழக்கிழமை) காலை 6.10 மணியளவில் காலமானார். இவரது உடலுக்கு பொதுமக்கள், திரையுலகம் மற்று அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இவர் 1979 ஆம் ஆண்டில் இயக்குனர் காஜா இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை என்ற படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் நடித்து தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். அதனையடுத்து 1980 ஆண்டில் வெளியான தூரத்து இடி முழக்கம் என்ற படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்தார். பின்னர் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டில் வெளியான சட்டம் ஒரு இருட்டறை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து மிக பெரிய வெற்றி படத்தை கொடுத்தார். இப்படம் தான் விஜயகாந்திற்கு தமிழ் சினிமாவிலே பெரும் திருப்பு முனையாக இருந்தது.

Also Read >> Actor, DMDK chief Vijayakanth dies at 71 : நல்ல திரைப்படக்கலைஞர்… நல்ல அரசியல் தலைவர்… நல்ல மனிதர்… நல்ல சகோதரர்… ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்! தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

இவர் ஒரே ஆண்டில் மட்டும் 18 படங்களில் கதாநாயகனாக நடித்து யாரும் நினைத்து பார்க்காத அளவிற்கு சாதனை படைத்துள்ளார். 1984ம் ஆண்டில் மதுரை சூரன், மெட்ராஸ் வாத்தியார், தீர்ப்பு என் கையில், வெற்றி, நூறாவது நாள், நல்ல நாள், மாமன் மச்சான், வீட்டுக்கு ஒரு கண்ணகி, சபாஷ், நாளை உனது நாள், சத்தியம் நீயே, இது எங்க பூமி, வைதேகி காத்திருந்தாள், ஜனவரி 1, குடும்பம், வேங்கையின் மைந்தன், குழந்தை ஏசு, வெள்ளைப்புறா ஒன்று என மொத்தம் 18 படங்களில் நடித்து தமிழ் திரையுலகிலே பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார்.

இன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி படத்தில் நடிக்கிறார்கள். ஆனால் எந்தவொரு டெக்னாலஜியும் இல்லாத காலத்தில் அசால்டாக நடித்து அசத்தியுள்ளார் நடிகர் விஜயகாந்த்.

இந்த மாதிரி நியூஸ்லாம் உடனே உங்க போன்ல பாக்க எங்களோட TELEGRAM இல்லனா WHATSAPP குரூப்ல ஜாயின் பண்ணுங்க…

Scroll to Top