2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றார். இவர் முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு முதன்முதலாக தென்காசிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க ரயிலில் பயணிக்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு விமானம் மூலம் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில், முதன்முறையாக தென்காசிக்கு ரயிலில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்காக நேற்று இரவு 8.40 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து பொதிகை ரயில் மூலம் தென்காசிக்கு புறப்பட்டார். தென்காசி ரயில் நிலையத்தில் முதலமைச்சருக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் திமுக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், இன்று தென்காசிக்கு வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுமார் 1 லட்சத்து 6 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.149 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், நாளை மதுரைக்கு சென்ற அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023