இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து – கடைசி டி20

இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை சமன் செய்தது நியூசிலாந்து - கடைசி டி20

நியூசிலாந்து அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டி20 மற்றும் 4 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டி20 போட்டியில் இங்கிலாந்து அணியும், 3-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியின் டாஸ்கை இங்கிலாந்து அணி வென்றது. டாஸ்கை வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து 8 விக்கெட்டுகளுக்கு 175 ரன்களை எடுத்தது. இதில் அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 73 ரன்களை பேர்ஸ்டோவ் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தில் களம் இறங்கியது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சைபர்ட் 32 பந்தில் 48 ரன்னும், கிளென் பிலிப்ஸ் 25 பந்தில் 42 ரன்னும், சாப்மேன் 25 பந்தில் 40 ரன்னும் எடுத்தனர். அடுத்தடுத்து அதிரடியில் இறங்கிய நியூசிலாந்து அணி 17.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளுக்கு 179 ரன்களை எடுத்து அபார வெற்றியை பெற்றது.

ALSO READ > சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்பட அப்டேட்!

இதனால் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 2-2 என நியூசிலாந்து அணி சமநிலைப்படுத்தியது. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நியூசிலாந்து அணியின் ஆட்டக்காரர் மிட்செல் சான்ட்னருக்கு ‘ஆட்ட நாயகன்’ விருது அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியில் அதிக ரன்களை குவித்த ஆட்டக்காரர் பேர்ஸ்டோவுக்கு ‘தொடர் நாயகன்’ விருது வழங்கப்பட்டது.